ETV Bharat / state

பயிற்சி முடித்த ஜெயிலர்களுக்கு கர்நாடக எடிஜிபி அறிவுரை - கர்நாடக எடிஜிபி

வேலூர்: தொரப்பாடியில் நடந்த ஜெயிலர்கள் பயிற்சி நிறைவு விழாவில், பயிற்சி முடிந்த ஜெயிலர்களுக்கு கர்நாடக எடிஜிபி அறிவுரை வழங்கினார்.

police
author img

By

Published : Jun 1, 2019, 11:43 PM IST

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள சிறை நிர்வாகம், சீர்திருத்த பயிற்சி மையத்தில் 32 சிறை ஜெயிலர்கள், கர்நாடகாவிலிருந்து ஒரு உதவி கண்காணிப்பாளர், கேரளாவிலிருந்து ஒரு உதவி சிறை ஜெயிலர் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர்.

இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறை அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில், கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபி மெகரிக் பங்கேற்று திறந்த வேனில் நின்றபடி பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், பயிற்சியின்போது சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். கடந்த ஒன்பது மாதமாக இந்த அலுவலர்களுக்கு, சிறை நிர்வாகம், குற்றவியல், உளவியல், சமூகவியல், மனித உரிமைகள், சட்டம் குறித்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. துப்பாக்கிச் சுடுதல், யோகா போன்ற உடற்பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்பட்டது.

பயிற்சி முடித்த ஜெயிலர்களுக்கு கர்நாடக எடிஜிபி அறிவுரை

அப்போது அவர் பேசுகையில், "நீங்கள் இந்த பணியில் சேர யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை, எனவே அதற்கேற்ப நீங்கள் உங்கள் சேவையில் நேர்மையாக பணியாற்றுங்கள் குறிப்பாக சிறையில் கைதிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும். அது தண்டனை கைதியானாலும் சரி விசாரணை கைதியானாலும் சரி அனைவரையும் பாதுகாப்புடன் வழிநடத்த வேண்டும். குறிப்பாக அவர்களின் மருத்துவ சேவையில் அதிக பங்காற்ற வேண்டும்.

சிறையில் எப்போதும் அமைதி நிலவ நீங்கள் பாடுபட வேண்டும். சீருடை அலுவலர்கள் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அது உங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தினார்.

Intro:சிறைக்குள் ஜெயிலர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்?

வேலூரில் நடந்த பயிற்சி நிறைவு விழாவில் கர்நாடக ஏடிஜிபி அறிவுரை

Body:வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையம் உள்ளது இங்கு 32 சிறை ஜெயிலர்கள் கர்நாடகாவில் இருந்து ஒரு உதவி கண்காணிப்பாளர் கேரளாவில் இருந்து ஒரு உதவி சிறை ஜெயிலர் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர் இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறை அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது இதில் கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபி மெகரிக் பங்கேற்று பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் அதன்படி அவர் திறந்த வேனில் நின்றபடி பயிற்சி அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார் பின்னர் பயிற்சியின்போது சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார் தற்போது பயிற்சி முடித்துள்ள அதிகாரிகளுக்கு ஒன்பது மாதம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன அதன்படி அவர்களுக்கு சிறை நிர்வாகம் குற்றவியல் உளவியல் சமூகவியல் மனித உரிமைகள் மற்றும் சட்டம் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது மேலும் பயிற்சியின்போது துப்பாக்கி சுடுதல் மற்றும் யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டன பயிற்சி நிறைவு விழாவில் வேலூர் தொரப்பாடி சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மைய இயக்குனர் சந்திரசேகர் துணை இயக்குனர் கருப்பண்ணன் தமிழ்நாடு சிறை துறை துணைத் தலைவர் ஜெயபாரதி(வேலூர் சரகம்) ஆகியோர் உடன் இருந்தனர் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபி மெகரிக், " நீங்கள் அனைவரும் நேர்மையான முறையில் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளீர்கள் நீங்கள் இந்த பணியில் சேர யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை எனவே அதற்கேற்ப நீங்கள் உங்கள் சேவையில் நேர்மையாக பணியாற்றுங்கள் குறிப்பாக சிறையில் கைதிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் அது தண்டனை கைதியானாலும் சரி விசாரணை கைதியானாலும் சரி அனைவரையும் பாதுகாப்புடன் வழிநடத்த வேண்டும் குறிப்பாக அவர்களின் மருத்துவ சேவையில் அதிக பங்காற்ற வேண்டும் சிறையில் எப்போதும் அமைதி நிலவ நீங்கள் பாடுபட வேண்டும் சீருடை அதிகாரிகள் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது அது உங்களுக்கு கிடைத்துள்ளது எனவே அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.