வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜானி. இவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தையை சட்டவிரோதமாக கைது செய்து சித்திரவதை செய்ததாக, காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் என்பவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தினர் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை படுகொலைக்கு துணைபுரிந்த அரசு மருத்துவர் வனிலா, நீதிமன்ற நடுவர் சரவணன், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவை சித்திரவதை செய்த வனக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
பின்னர், இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.