ETV Bharat / state

கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் - தேர்தல் அலுவலரிடம் மனு!

வேலூர் : திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.11.48 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்து, வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் அலுவலரிடம் சுயேச்சை வேட்பாளர் கதிரவன் மனு அளித்துள்ளார்.

dmk
author img

By

Published : Apr 3, 2019, 8:31 PM IST

சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, கல்லூரி மற்றும் அவரது நெருங்கிய நண்பர் சீனிவாசன், உதவியாளர் அஷ்கரர் அலி என துரைமுருகன் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.11.48 கோடி பணமும் வருமானவரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் சாக்கு மூட்டைகளில் பணம் கட்டி வைக்கப்பட்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும்,

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கே இந்த பணம் துரைமுருகன் தரப்பு மறைத்து வைத்திருக்கிறது, இதனால் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

வேலூர் சுயேச்சை வேட்பாளர் கதிரவன்

இந்நிலையில், மக்களை பாதிக்கும் வகையில் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளி வைக்காமல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்ற அடிப்படையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கதிரவன் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.

Intro:ஐடி ரெய்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் எதிரொலி

வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் போட்டியிட தடை விதிக்க வேண்டும்

தேர்தல் அதிகாரியிடம் சுயேச்சை வேட்பாளர் மனு

Body:வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிடுகிறார் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர் அதனைத் தொடர்ந்து துரைமுருகனின் கல்லூரி மற்றும் அவரது நெருங்கிய நண்பர் சீனிவாசன், உதவியாளர் அஷ்கரர் அலி என துரைமுருகன் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனை என்பது காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் ரூ 10 லட்சம் பணமும் துரைமுருகனின் நெருங்கிய நெருங்கிய நண்பரான சீனிவாசனின் சகோதரி விஜயா வீட்டில் 11.48 கோடி பணமும் வருமானவரித்துறலயினரால் கைப்பற்றப்பட்டது மேலும் வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் அளிக்கசாக்கு மூட்டைகளில் பணம் கட்டி வைக்கப்பட்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அரசியல் தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு மற்றும் நண்பர்களது வீட்டில் ஐடி ரெய்டு நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கே இந்த பணம் துரைமுருகன் தரப்பு மறைத்து வைத்திருப்பதாகவும் எனவே இத்தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர் இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் குடியாத்தத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கதிரவன் என்பவர் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார் அப்போது அவர் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ராமனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார் அந்த புகார் மனுவில் தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன் கடந்த இரண்டு நாட்களாக திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் வீட்டில் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று அதன் மூலம் பல கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பிரித்து வழங்குவதற்குரிய பட்டியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்தேன் தலைமை தேர்தல் அதிகாரியே இதை தெரிவித்துள்ளார் தேர்தல் விதிமுறைக்கு மாறாகவும் பல கோடி ரூபாய்கள் வாக்காளர்களுக்கு தருவதற்கு தயாராக வைத்திருந்தார் என்பது தெரிந்து இதன் மூலம் இவர் ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற வகையில் உரிய முறையில் விசாரணை செய்து மேற்படி வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை வேட்பாளராக போட்டியிடுவதை தடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மேலும் இனி வரும் காலங்களிலும் அவர் தேர்தலில் நிற்க தடை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மக்களின் பிரதிநிதியாக பணியாற்ற தேர்தலில் போட்டியிடுகின்ற எங்களைப் போன்ற எந்த தவறும் செய்யாதவர்கள் பாதிக்காத வகையில் தேர்தலை நிறுத்தாமல் அவரை மட்டும் தகுதி நீக்கம் செய்து தேர்தல் நடைபெற வழிவகை செய்ய வேண்டும்

Conclusion:இவ்வாறு மனு அளித்துள்ளார் இதேபோல் மற்றொரு சுயேச்சை வேட்பாளர் கோதண்டன் என்பவரும் துரைமுருகன் மகனுக்கு எதிராக இன்று தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே வருமானவரித்துறை சோதனையால் துரைமுருகன் தரப்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சுயேச்சை வேட்பாளர்களும் அவரது மகனுக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.