ETV Bharat / state

'இடஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸுக்கு ஆதரவாக நிற்பேன்' - சீமான் - i support ramadoss in reservation says Seaman

இடஒதுக்கீட்டு கொள்கையில் பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு ஆதரவாகத்தான் நிற்பேன் என்றும், எப்போதும் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் ராமதாஸ் உறுதியாக இருப்பார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

i support ramadoss in reservation says Seeman
'இடஒதுக்கீட்டு கொள்கையில் ஐயாவுக்கு ஆதரவாக நிற்பேன்'- சீமான்
author img

By

Published : Jan 30, 2021, 8:19 PM IST

வேலூர்: வேலூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கான வேட்பாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சி, நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று (ஜனவரி 30) நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பாஜக ஆட்சியின் சாதனை, திட்டங்கள் குறித்துப் பேச ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாமே கொடும் திட்டங்கள்தான்.

நாங்கள் வேல்-ஐ கையில் எடுத்தது பண்பாட்டு மீட்சி. ஆனால், பாஜக மற்றும் திமுக ஸ்டாலின் வேல்-ஐ கையில் எடுத்திருப்பது தேர்தலுக்காகத்தான். தமிழ் இறை அனைவருக்கும் சொந்தம். இத்தனை ஆண்டுகளாக ஸ்டாலின் ஏன் வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. பாஜகவும் கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளாக வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. தற்போது எடுப்பது தேர்தலுக்காக என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

'இடஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸுக்கு ஆதரவாக நிற்பேன்' - சீமான்

வேளாண் குடி மக்களின் கடனை ரத்துசெய்யப்பட வேண்டும் என மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். நாம் தமிழர் கட்சி இந்திய கட்சிகள், திராவிட கட்களுடன் கூட்டணி வைக்காது. தனித்துதான் போட்டியிடும். 7 பேர் விடுதலை என்பது 25 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது ஆளுநர் கையெழுத்தில் இருக்கிறது.

தற்போது விடுதலை செய்ய வேண்டும். போராடி எப்படியும் விடுதலையை சாத்தியப்படுத்துவோம். தேர்தல் லாபத்திற்காக செய்தாலும் 7 பேரை தயவு செய்து விடுதலை செய்யுங்கள். இந்த முறை வெற்று அறிவிப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசியம் நம் தமிழர் கட்சியால் சாத்தியம் இல்லை என நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் கூறியது குறித்து கேட்டதற்கு, "சில பைத்தியக்காரர்களின் புலம்பலுக்குப் பதில் சொல்ல முடியாது விளக்கம் சொல்ல முடியாது.

இது என் தேசம் என் நாடு இங்கு வாழுகிற குடிகளுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல். இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸுக்கு துணை நிற்பேன். இடஒதுக்கீட்டில் அவர் எப்போதுமே உறுதியாக இருப்பார் அந்த இடத்தில் அவருக்கு ஆதரவாக நான் நிற்பேன்" என்றார்.

இதையும் படிங்க: 'சீமானை விட அதிகம் தமிழை வளர்த்தவர் திருமலை நாயக்கர்'- அர்ஜுன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.