ETV Bharat / state

'லாக்டவுன்' மீள முடியாத பணச் சுமையில் திருமணம் சார்ந்த தொழில்கள்!

author img

By

Published : Jun 4, 2021, 11:30 AM IST

Updated : Jun 4, 2021, 6:17 PM IST

வேலூர்: கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் திருமணம் சார்ந்த தொழில்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

மீள முடியாத பணிச் சுமையில் திருமணம் சார்ந்த தொழில்கள்

கரோனா பொருந்தொற்று கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் நோயினை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை அரசு எடுத்து வருகிறது. அதில் மிக முக்கியமாக ஊரடங்கினை ஒரு நோய் கட்டுப்பாட்டு வழிமுறையாக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கினால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்துள்ளது. கரோனா தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க அரசு முழு ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது.

இதில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பெரும்பாலானோர் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்துவிடுவதால் திருமணங்களை நம்பி உள்ள தொழில்களான போட்டோகிராஃபி, டிஜே, பாட்டு கச்சேரி, திருமண மண்டபங்கள் போன்ற பலவும் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. குறைந்தது மாதம் 20 திருமணங்கள் நடைபெறும் இடத்தில் ஒன்று நடைபெறுவதே கேள்விக்குறியாக இருப்பதால், இது சார்ந்த தொழில் செய்து வருபவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மீள முடியாத பணச் சுமையில் திருமணம் சார்ந்த தொழில்கள்

இது தொடர்பாக வேலூரைச் சேர்ந்த திருமண நிகழ்ச்சி அமைப்பாளர் நரேஷ் கூறுகையில், "கரோனா ஊரடங்கிற்கு முந்தைய காலங்களில் மாதம் குறைந்தது பத்து நிகழ்ச்சிக்காவது ஆர்டர் வந்துவிடும். தற்போதெல்லாம் ஒன்று, இரண்டு வருவதே அதிசயமாக உள்ளது. முற்றிலுமாக தொழில் பாதிப்படைந்துள்ளது. கடந்த ஆண்டு போடப்பட்ட ஊரடங்கில் இருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்தோம். இச்சூழலில் திடீரென இந்தாண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் எங்களுக்கும் அதீத வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் இந்த ஊரடங்கு எவ்வளவு நாள் தொடரும் என்பதும் தெரியவில்லை. இதற்கு பிறகு எப்படி வாழ்க்கையை தொடரப் போகிறோம் என்பதே கேள்விக்குறியாக உள்ளது" என்றார்.

ஊரடங்கு காலத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுகளில் மொத்தமே 50 பேர் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதால் திருமணம் வீட்டார் வீட்டிலேயே வைத்து திருமணத்தை முடித்து விடுகின்றனர். இது போன்ற சிறிய நிகழ்வுகளுக்கு புகைப்படம் எடுக்கவும் ஆர்டர் வருவதில்லை. இப்படியாக எந்த ஒரு ஆர்டரும் இல்லாமல் குடும்பத்தைச் சமாளிப்பதற்கு கடினமாக தான் உள்ளது.

திருமண நிகழ்வுகளில் மிகவும் அத்தியாவசிய ஒன்றான திருமண மண்டபங்களின் நிலையை அறிய வேலூர் மாவட்ட திருமண மண்டபங்கள் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். அப்போது பேசிய அச்சங்கத்தின் தலைவர் மணிநாதன், "தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கினால் மண்டபங்களை முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்த பலரும் தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர். நாங்களும் எங்களது சங்கத்தின் முடிவாக கருதி முழுமையாக பணத்தை உரியவர்களிடம் திருப்பி அளித்து வருகிறோம். மேலும் இவர்களில் சிலர் 50 நபர்களை மட்டும் வைத்து திருமணம் நடத்திக்கொள்வதாக கூறுகின்றனர்.

இவர்களைப் போன்றவர்களுக்கு அவர்கள் கட்டிய பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்துவிட்டு ஊரடங்கு காலச் சலுகை என்ற அடிப்படையில் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம். ஊரடங்கு காலத்தில் மண்டபத்தில் நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாத சூழலிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச மின்திறனுக்கு ஏற்றவாறு நாங்கள் மின்சாரம் பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அதற்கான கட்டணத்தை செலுத்தி வருகிறோம். மண்டபத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளமும் கொடுத்து இந்த கட்டணத்தையும் செலுத்தி வருவது எங்களுக்கு அதீத வருமான இழப்பை ஏற்படுத்துகிறது" என்றார்.

வரக்கூடிய காலகட்டத்தில் திருமண மண்டபம் நடத்துவது என்பதே இயலாத ஒன்றாக மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளது. பலரும் தங்களது மண்டபத்தை மூடிவிட்டு அந்த இடத்தை வேறு எதற்காவது பயன்படுத்த முடியுமா என்று ஆலோசித்து வருகின்றனர்.

திருமணம் செய்பவர்களும் கோயிலில் திருமணம், ஓட்டலில் வரவேற்பு என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் என்கிறார் அச்சங்கத்தின் பொருளாளர் ராஜா. இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்களுடைய மண்டபங்களில் காவலாளிகள், தூய்மை பணியாளர்கள் என ஐந்தில் இருந்து பத்து நபர்கள் வரை மாத சம்பளத்திற்கு அமர்த்தி உள்ளோம். இவர்களுக்கு நிகழ்ச்சி நடைபெற்றாலும் இல்லாவிட்டாலும் மாதச் சம்பளம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த நிலையில் எங்கள் தலைவர் மணிநாதன் கூறியது போன்று நாங்கள் மண்டபங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலையான மின்சார கட்டணத்தை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கடந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை நாங்கள் நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாவிட்டாலும் செலுத்திவந்தோம். இவற்றிலும் அரசாங்கம் சலுகைகள் அளித்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை மண்டபங்களில் நிகழ்ச்சிகளுக்கான புக்கிங் என்பதே இல்லை. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே தொழில் நடைபெற்றது. முன்பு சராசரியாக 45 முதல் 50 நிகழ்ச்சிகள் புக்கிங் ஆன நிலையில் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளின் காரணத்தால் ஒன்று அல்லது இரண்டு திருமண நிகழ்ச்சிகளே புக்கிங் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஊரடங்கு ஆறு மாத காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அதே போன்ற ஒரு சூழல் உருவாகி விடக்கூடுமோ என்ற அச்சத்தில் மக்கள் யாரும் இதுவரை புதிதாக புக்கிங் செய்யவில்லை. கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை மண்டப உரிமையாளர்கள் எவரும் லாபம் ஈட்டவில்லை. அனைவரும் முன்பதிவுக்கு கொடுக்கப்பட்ட பணத்தைத் திருப்பி கொடுத்தும், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய கட்டணத்தை கட்டியும், மாதத் தவணை, லோன் போன்றவற்றையும் செலுத்தி வருகின்றனர். பெருத்த நஷ்டத்தில் இத்தொழில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: பூச்சி ப்ரே: போட்டி போட்டு ருசிக்கும் மக்கள்

Last Updated : Jun 4, 2021, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.