வேலூர்: குடியாத்தத்தை அடுத்த பெரும்பாடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
புகாரரையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில், குடியாத்தம் தாலுகா காவல் நிலைய காவலர்கள் பெரும்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெரும்பாடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி (60) மற்றும் அவருடைய மனைவி பூங்கொடி (48) ஆகிய இருவரையும் கைது நேற்று (ஜூலை 28) செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்த 55 லிட்டர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டி கொலை - 6 சவரன் நகை கொள்ளை