ETV Bharat / state

பேருந்தை சிறைபிடித்த மலைவாழ் மக்கள் - வேலூர் அமிர்தியில் பரபரப்பு - அமிர்தி வன பகுதி

அமிர்தியில் பேருந்துகள் நிறுத்தப்படாததால், நாக நதி பாலத்தின் மீது பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்தை சிறை பிடித்த மலைவாழ் மக்கள்
பேருந்தை சிறை பிடித்த மலைவாழ் மக்கள்
author img

By

Published : Dec 28, 2022, 8:56 PM IST

வேலூர்: அமிர்தி வன உயிரியல் பூங்கா ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஜவ்வாது மலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மலையிலிருந்து இறங்கி வந்து, அமிர்தி வன உயிரியல் பூங்காவை கடந்து, வேலூர் மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம்.
வேலூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமிர்தி வன உயிரியல் பூங்கா, ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஜவ்வாது மலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மலையிலிருந்து இறங்கி வந்து, அமிர்தி வன உயிரியல் பூங்காவை கடந்து, வேலூர் மற்றும் பல்வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம்.

வேலூரில் இருந்து மூன்று பேருந்துகள் அமிர்திக்கு இயக்கப்பட்டு வந்தது. மலைவாழ் மக்கள் அமிர்தியை ஒட்டி செல்லும் ’நாகநதி’ என்ற ஆற்றைக் கடந்து சென்று தான் பேருந்தில் பயணிக்க முடியும். ஆற்றில் வெள்ளம் வந்தால் மலைவாழ் மக்கள் வன உயிரின பூங்காவை கடந்துசெல்ல முடியாது.

மலை வாழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்ற வருடம் தமிழக அரசால் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் நாகநதியின் மீது மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமிர்திக்கு வரும் எந்த பேருந்தும் அமிர்திக்கு வராமல், அதற்கு முன்பு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வேடக்கொல்லை மேடு என்ற பகுதியோடு திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் வேலூரில் படிக்கும் மாணவ மாணவிகள், சிகிச்சைக்கு செல்லும் கர்ப்பிணிகள், ஐந்து கிலோ மீட்டர் தொலைவை கடக்க மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மலைவாழ் மக்கள் அமர்திக்கு வராத பேருந்தை, நாக நதி பாலத்தின் மீது வழிமறித்து, சிறைப்பிடித்து முற்றுகையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வேலூர் போக்குவரத்து கழக பொது மேலாளர் கணபதி மற்றும் வணிக மேலாளர் பொன்னு பாண்டியன் ஆகியோர் தொலைபேசியில் மலைவாழ் மக்களிடம், பேருந்து அமிர்தி வரை இயக்குவோம் என்று உறுதி அளித்ததால் மலைவாழ் மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு வழக்கு: மேலும் இருவர் கைது..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.