ETV Bharat / state

'உங்களுக்காக ஒரு மணி நேரம் மறியல்' - காவல் ஆய்வாளர் கறார்! - காவல் ஆய்வாளர்

வேலூர்: திருப்பத்தூரில் காவல் அலுவலர் ஒருவர் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு நடுரோட்டில் வைத்து பாடம் நடத்திய சம்பவம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

File pic
author img

By

Published : Jun 3, 2019, 12:49 PM IST

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 15 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. விபத்துக்களைத் தடுக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று போக்குவரத்து அலுவலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மதன லோகநாதன் இன்று (ஜூன் 3) திருப்பத்தூர் பகுதியில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக சாலையில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர் காவலர்களைக் கொண்டு சாலையின் இருபுறமும் சென்ற வாகனங்களை அங்கேயே நிறுத்தி தான் பேசுவதை கவனிக்கும்படி ஒலிபெருக்கியில் அறிவித்தார்.

அதில், இங்கே ஒருவரைத் தவிர யாராவது ஹெல்மெட் போட்டு இருக்கீங்களா 100 வண்டி இருக்குது, அதில் ஒருவர் மட்டும்தான் ஹெல்மட் போட்டுள்ளார். நாங்கள் கத்திக் கொண்டே இருக்கிறோம் யாருக்காக கத்துகிறோம்? உங்கள் குடும்பத்திற்காகவும்தான் கத்துகிறோம்!

நான் இங்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் 15 பேர் விபத்தில் பலியானதைக் கண்டுள்ளேன். திடீரென விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் எவ்வளவு வேதனை? ஏன் இதை உணர்வதில்லை?

உங்களுக்காக இன்று நான் ஒரு மணி நேரம் மறியல் செய்கிறேன் ஒரு மணி நேரம் உங்களை நிறுத்தி வைக்கிறேன்... யாரும் செல்லக்கூடாது! ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் போகவேண்டாம் மூன்று பேர் பயணிக்க வேண்டாம் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்ட வேண்டாம் என சொல்கிறோம் ஆனால் யாரும் கேட்பது கிடையாது.

இனி ஹெல்மெட் இல்லாமல் போனால் ஒவ்வொரு வண்டிக்கும் 200 ரூபாய் அபராதம் விதித்து அரைமணி நேரம் இங்கேயே பிடித்து வைக்கப் போகிறேன் என்று பேசினார்.

ஹெல்மட் குறித்த விழிப்புணர்வு

ஆய்வாளரின் இந்தப் பேச்சு கண்டிப்புடன் இருந்தாலும் கூட, அது முழுக்க முழுக்க வாகன ஓட்டிகளின் மீதான அக்கறை சார்ந்தது என்பதால் ஆய்வாளர் பேச்சு திருப்பத்தூர் பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்று, ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை உணர்த்திய காவல் ஆய்வாளருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Intro:Body:

Intro:பொறுப்புடன் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் அதிகாரி 

திருப்பத்தூரில் ஹெல்மெட் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு நடுரோட்டில் பாடம் நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர்

Body:தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 15 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது இதில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் மட்டும் ஆண்டுக்கு சுமார் 3000 பேர் உயிரிழக்கின்றனர் எனவே வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் கூட உத்தரவிட்டது போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது ஆனாலும் இதுவரை ஹெல்மெட் அணிவது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் 100% விழிப்புணர்வை கொண்டு செல்ல முடியவில்லை இதற்கு காரணம் விழிப்புணர்வை பொறுப்புண்ர்வோடு ஏற்ப்படுத்தாமல் கடமையாக கருதி அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் தான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த சூழலில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காவல் அதிகாரி ஒருவர் பொறுப்புணர்வுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹெல்மட் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு நடுரோட்டில் பாடம் நடத்திய சம்பவம் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது அதாவது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மதன லோகநாதன் இன்று திருப்பத்தூர் பகுதியில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக சாலையில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அப்போது அவர் காவலர்களை கொண்டு சாலையின் இருபுறமும் சென்ற வாகனங்களை அங்கேயே நிறுத்தி தான் பேசுவதை கவனிக்கும்படி ஒலிபெருக்கியில் அறிவித்தார் அப்போது பேசிய இன்ஸ்பெக்டர் மதன் லோககநாதன், " இங்கே ஒருவரைத் தவிர யாராவது ஹெல்மெட் போட்டு இருக்கீங்களா 100 வண்டி இருக்குது அதில் ஒருவர் மட்டும் தான் ஹெல்மட் போட்டுள்ளார் நாங்கள் கத்திக் கொண்டே இருக்கிறோம் யாருக்காக கத்துகிறோம் உங்கள் குடும்பத்திற்காகவும் தான் கத்துகிறோம். நான் இங்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகுது அதற்குள் விபத்தில் இறந்த 15 சடலத்தை எடுத்து போட்டுள்ளேன் அந்த குடும்பத்தை யார் காப்பாற்றுவது? கஷ்டப்பட்டு வீட்டில் வளர்த்து படிக்க வைக்கிறார்கள். திடீரென விபத்தில் சிக்கி இறந்து விட்டால் எவ்வளவு வேதனை ஏன் இதை உணர்வதில்லை எல்லோரும் மறியல் செய்கிறார்கள் அது வேண்டும் இது வேண்டும் என மறியல் செய்கிறீர்கள் தண்ணீர் கேட்டு மறியல் செய்கிறீர்கள் உங்களுக்காக இன்று நான் ஒரு மணி நேரம் மறியல் செய்கிறேன் ஒரு மணி நேரம் உங்களை நிறுத்தி வைக்கிறேன் யாரும் செல்லக்கூடாது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் போகவேண்டாம் மூன்று பேர் பயணிக்க வேண்டாம் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்ட வேண்டாம் என சொல்கிறோம் ஆனால் யாராவது கேட்கிறீர்களா? ஏன் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஹெல்மெட் வாங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? இனி ஹெல்மெட் இல்லாமல் போனால் ஒவ்வொரு வண்டிக்கும் 200 ரூபாய் அபராதம் விதித்து அரைமணி நேரம் இங்கேயே பிடித்து வைக்கப் போகிறேன்" என்று பேசினார்.

 ஆய்வாளரின் இந்த பேச்சு கண்டிப்புடன் இருந்தாலும் கூட, அது முழுக்க முழுக்க வாகன ஓட்டிகளின் அக்கறை சார்ந்தது என்பதால் ஆய்வாளர் பேச்சு திருப்பத்தூர் பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது நமக்காக தான் பேசுகிறார் என்பதை உணர்ந்த வாகன ஓட்டிகளும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆய்வாளரின் பேச்சை மிக உன்னிப்பாக கவனிக்கின்றனர். "சொல்வது நமது கடமை கேட்பது அவர்கள் உரிமை என்று அலட்சியமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு மத்தியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடுரோட்டில் பொதுமக்களை நிறுத்தி பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது போல் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை உணர்த்திய காவல் ஆய்வாளருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Conclusion:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.