வேலூர் வடக்கு காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் விஜயகுமார். இவர் நேற்று முன்தினம் (ஜன.16) ஆற்காடு சாலையில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனை அருகே மஃப்டியில் வாரண்ட் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அலுவல் ரீதியாக ஆவணங்களை நகல் எடுக்கச்சென்றுள்ளார்.
அச்சமயம் கடையில் இருந்த ஸ்டீபன் (24), அருண்குமார் (23) ஆகியோர் குடிபோதையில் காவலரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே தகராறு முற்றவே, குடிபோதையில் இருந்த இருவரும் காவலரை செங்கல்லால் தாக்கியுள்ளனர்.
இதில் இடது கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் வடக்கு காவல் துறையினர் தகராறில் ஈடுபட்ட இருவரையும் தேடி கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று (ஜன. 17) குடியாத்தம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:அண்ணா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை, ரூ. 1 லட்சம் திருட்டு