திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு பனஸ்வாடியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயிலில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா கடத்தப்படுவதாக ரயில்வே நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த, எர்ணாகுளம் விரைவு ரயிலில், ரயில்வே காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் எஸ் 2 கோச்சிலிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 கிலோ பான் மசாலா பறிமுதல்செய்யப்பட்டது.
பின்னர் பறிமுதல்செய்யப்பட்ட பான் மசாலா பெட்டிகளை ரயில்வே காவல் துறையினர் திருப்பத்தூர் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் பான் மசாலா பெட்டிகளைக் கடத்தியவர்கள் குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில்வே காவலரின் துணிச்சலான செயல் - பொதுமக்கள் பாராட்டு!