ETV Bharat / state

வேலூரில் 11 சவரன் நகைகளைத் திருடி உருக்கிய 2 பெண்கள் கைது - கைது

வேலூரில் 11 சவரன் நகைகளைத் திருடி, அதை உருக்கி அடகு வைத்தது தொடர்பாக, 2 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளும் மீட்கப்பட்டு உள்ளன.

gold-jewels-theft-2-women-arrested-in-vellore
வேலூரில் 11 பவுன் நகையை திருடி உருக்கிய 2 பெண்கள் கைது
author img

By

Published : Jun 19, 2023, 12:37 PM IST

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர், பிரகாஷ் (வயது 30). தனியார் சாக்லேட் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் அதேபகுதியைச் சேர்ந்த உறவினரான ராஜேஸ்வரி (24) என்பவர் தங்கி இருந்தார். கடந்த ஜனவரி மாதம் பிரகாஷ் வீட்டில் இருந்து, 11 சவரன் நகைகள் திருடு போனது. இதுதொடர்பாக அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், வழக்கின் தொடக்கத்தில் போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. எனவே, ராஜேஸ்வரி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டர்கள் காஞ்சனா, தேவபிரகாஷ் ஆகியோர் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் ரஞ்சித் ராஜா, சுதா ஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அதில் ராஜேஸ்வரியின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர். அப்போது அவர் வேறு ஒரு பெண்ணிடம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பேசியது போலீசாருக்கு தெரியவந்தது. அந்தப் பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை மாவட்டம், கோவில்பாளையத்தைச் சேர்ந்த பழனிமுருகன் என்பவரின் மனைவி சங்கீதா (36) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர், அங்குள்ள வங்கி ஒன்றில் நகை ஒன்றை அடகு வைத்ததை போலீசார் கண்டறிந்தனர். அந்த நகை, பிரகாஷ் வீட்டில் இருந்து திருடு போன நகையாக இருக்கலாம் என்று கருதி போலீசார், விசாரணையை மேலும் துரிதப்படுத்தினர்.

அந்த நகை, பிரகாஷ் வீட்டில் இருந்து மாயமான நகை தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனிடையே நகையை சங்கீதா மீட்டு, அதை உருக்கி உள்ளார். போலீசார் சங்கீதாவைப் பிடித்து கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரி, நகையைத் திருடி தன்னிடம் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார், ராஜேஸ்வரியையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜேஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றியபோது அவருக்கும், சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. வேலூரில் திருடிய நகையை அவர் சங்கீதாவிடம் கொடுத்து அடகு வைத்து உள்ளார். அவர்களிடம் இருந்து உருக்கி வைத்துள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான நகையை மீட்டு உள்ளதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர்.

உறவினர் வீட்டிலேயே, நகையைத் திருடி, அதை உருக்கி அடகு வைத்து உள்ள சம்பவத்தில், இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்குத் தகுதி வந்துவிடுமா? - சீமான் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.