ETV Bharat / state

பாலாற்றில் கங்கை ஆரத்தி! நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு

வேலூரில் நீர்நிலைகளை பாதுகாக்கவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும் வேண்டி பால் குடங்கள் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாலாற்றில் கங்கை ஆரத்தி
பாலாற்றில் கங்கை ஆரத்தி
author img

By

Published : Jul 3, 2023, 3:10 PM IST

வேலூர்: தமிழகத்தில் நீர்நிலைகள் அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் சாயக்கழிவுகளாலும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் வேலூரில் நீர்நிலைகளை பாதுகாக்கவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும் வேண்டி பால் குடங்கள், மஞ்சள் சந்தன குடங்கள் எடுத்து வந்து பாலாற்றில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன.

பாலாற்றில் கங்கை ஆரத்தி

தமிழகத்தில் நீர் நிலைகளை, ஆக்கிரமிப்புகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல முன்னனி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது பாரதீய சன்னியாசிகள் கட்சி அதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றனர். பாலாற்றில் பல தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் மாசு அடைந்து நீரில் கலக்கும் குப்பைகளால் நீர் நுரையாக காட்சியளிக்கும் காட்சிகளை பார்த்துள்ளோம்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கும்பகோணத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா அறக்கட்டளையினர் இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு கூட்டத்தினை நடத்தினர். அதில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி புஷ்கரம், வைகை, தாமிரபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளை பாதுகாக்க புஷ்கர விழாக்கள் நடத்தினர். இதன் விளைவாக இந்த ஆறுகளில் நீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது என தகவல் அளித்தனர்.

இதையும் படிங்க: தீட்சிதர்களை தாக்கியதாக அவதூறாக பதிவு:பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவிற்கு சம்மன்!

மேலும் சாயக்கழிவுகளால் பாழ்பட்டு வரும் பாலாற்றை பாதுகாக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்த இருப்பதாகவும் அதன்படி கடந்த மே மாதம் இறுதியில் வேலூரில் பாலாறு பெருவிழா என்ற பெயரில் புஷ்கரம் நடத்த முடிவு செய்தனர். பின்னர், அதற்கான பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தன

இதன் அடிப்படையில், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வேலூரில் உள்ள மகா விஷ்னு துர்கையம்மன் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பாலாறு அம்மனை வைத்து நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் பால், மஞ்சள், சந்தனம் குடங்கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

பின்னர், வேலூர் பாலாற்றில் குப்பைகள் மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகளை கொட்ட கூடாது நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சாது சன்னியாசிகள் பாலாற்றில் பாலாறு அம்மனை வைத்து பால்,மஞ்சள் சந்தனத்தை கொண்டு பக்தர்களின் கைகளாலேயே அபிஷேகம் செய்ய வைத்தனர்.

இறுதியாக பாலாறு அன்னைக்கு பல சாதுக்கள் மற்றும் சன்னியாசிகள் நீரை பாதுகாக்கவும் வகையில் பூஜைகள் செய்து மகா தீபாராதனைகளும் காண்பித்தனர். கங்கையின் நதிக்கரையில் நடைபெறுவதை போல பாலாற்றிலும் கங்கை ஆரத்தி நடைபெற்றது.

இதையும் படிங்க: தஞ்சை பெரியகோயிலில் விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாணம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.