வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தனக்கு ஒரு மாதம் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சிறைத்துறை மூலம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதையடுத்து, நளினிக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேலூர் சிறைத்துறை எஸ்.பி., வேலூர் மருத்துவக் குழுவுக்கு பரிந்துரைத்தார். இதனையடுத்து இன்று (ஆகஸ்ட்.27) முழு உடல் பரிசோதனைக்காக வேலூர் பழைய அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவருக்கு ஈ.சி.ஜி, பல், எலும்பு, கர்ப்பப்பை சோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பரிசோதனைகளை ஆறு மருத்துவர்கள் கொண்ட குழு செய்தது. பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் அரசுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டு பிறகு மருத்துவ விடுப்பு அளிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நளினி, முருகன், சாந்தன் முன்விடுதலை கோரி மனு'