வேலூர்: காட்பாடியை அடுத்த வள்ளிமலையை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ராஜா. பேரணாம்பட்டு அருகே சொந்த ஊரில் நாளை(ஜூன். 22) திருவிழா நடைபெற உள்ளதால், 2 குழந்தைகள் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த கன்டெய்னர் லாரி இரு சக்கர வாகணம் மீது மோதியது. இந்த விபத்தில், ராஜா, அவரது மனைவி காமாட்சி, ஒரு குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வினோத் என்ற குழந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.
பின்னர் அங்கு சென்ற பேர்ணாம்பட்டு காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.