வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் பூசிமலைக்குப்பத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். கடந்த 24ஆம் தேதி வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டையில் நடைபெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்ற அந்த காளைக்கு கீழ் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு தாடை கிழிந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில், காளைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக அதன் உரிமையாளர் விஜயகுமார் அன்றைய தினம் வேலூரிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது காளையை பரிசோதித்த மருத்துவர்கள் காளைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் கால்நடை மருத்துவர் ஜோசப்ராஜ் தலைமையிலான மருத்துவர்கள் ரவிசங்கர், அரேஷ், சுப்பிரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் காளைக்கு மயக்க மருந்து அளித்து சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்த காளைக்கு 30 தையல் போடப்பட்டது.
மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு காளை நன்றாக உணவு எடுத்துக் கொள்வதாகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மணலியில் மண்டலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று