ETV Bharat / state

’தமிழ்நாட்டின் எந்த அரசியல் கட்சியும் நீட்டை ஏற்கவில்லை’ - கே.சி.வீரமணி - vellore latest news

நீட் தேர்வைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள முடியாத கட்டத்தில் தான் இருக்கின்றன.மத்திய அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
author img

By

Published : Sep 16, 2021, 7:47 AM IST

வேலூர்: காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி சௌந்தர்யா (17). நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் நேற்று (செப்.15) காலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு மாலை 5.30 மணி அளவில் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மாணவி சௌந்தர்யா
மாணவி சௌந்தர்யா

நீட் தேர்வில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவர்கள் அனைவரும் உறுதியோடு இருக்க வேண்டும். நாம் கண்டிப்பாக சாதிக்க முடியும். இந்தத் தேர்வில் வெற்றிபெறவில்லை என்றால் அடுத்த தேர்வில் மீண்டும் எதிர்கொள்ள முடியும். இதையெல்லாம் மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியிருந்தார். இன்று இறந்திருக்குக்கூடிய சௌந்தர்யா அரசுப் பள்ளியில் படித்து வந்த மாணவி என்பதால் கண்டிப்பாக இவருக்கு அந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்பு இருந்திருக்கும்.

மாணவர்களும் உறுதியோடு இருக்க வேண்டும்

ஆகவே, இதையெல்லாம் அவர்கள் உணராமல் எடுத்து இருக்கக்கூடிய இந்த முடிவானது சரியான முடிவாக இல்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாணவர்களும் உறுதியோடு இருக்க வேண்டும். கண்டிப்பாக சாதிக்க முடியும். நாம் இந்த நாட்டினுடைய எதிர்காலம் என்பதை அனைத்து மாணவர்களும் உணர்ந்து தங்களுடைய எதிர்காலத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

கடந்த அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சட்டப்பேரவையில் தீர்மானங்களைக் கூட தொடர்ந்து நிறைவேற்றி அனுப்பி வந்தோம்.

இன்று திமுக அரசும் அதனைக் கடைப்பிடித்து கொண்டுதான் இருக்கின்றது. நீட் தேர்வை தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள முடியாத கட்டத்தில் தான் இருக்கின்றன. ஆகவே மத்திய அரசு இதனைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை” என்றார்.

இதையும் படிங்க : ’அனிதா மரணத்தின்போது இருந்த அதே மனநிலையில் இருக்கிறேன்’ - முதலமைச்சர் உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.