ETV Bharat / state

வேலூர் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகளின் திடீர் ஆய்வு - கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல் - மீன் மார்க்கெட்

வேலூர் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து அங்கு விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன 12 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

வேலூர் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகளின் திடீர் ஆய்வில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது கண்டுபிடிப்பு!

author img

By

Published : Jun 2, 2022, 10:41 PM IST

வேலூர்: மக்கான் பகுதியிலுள்ள மீன் மார்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று (ஜூன் 02) காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அங்கிருந்த கடைகளில் இரால் உள்பட 12 கிலோ கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்து. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் உடனடியாக குப்பையில் கொட்டி அழித்தனர்.

வேலூர் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகளின் திடீர் ஆய்வில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது கண்டுபிடிப்பு!
வேலூர் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகளின் திடீர் ஆய்வு

மேலும், கெட்டுப்போன மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

தற்போது தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் உள்ளதால் கர்நாடக, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலூர் மீன் மார்கெட்டுக்கு மீன்கள் கொண்டு வரப்படுவதால் அவைகள் பார்மலின் ரசாயனம் போட்டு பதப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் மீன்கள் மீது PH மீட்டர் மூலம் சோதனையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் வியாபாரிகளை அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: கீழே கிடந்த நகை, பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான தந்தை - மகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.