ETV Bharat / state

வேலூர் நாட்டிய சங்கமம் 2023: மாணவி பிரணவதிக்கு முதல் பரிசான ரூ.1 லட்சம் மதிப்புள்ள 'வைரம்' - Rs 1 Lakh worth Diamond is First Prize

Vellore Natya Sangamam 2023: முதன்முறையாக வேலூரில் நடந்த நாட்டிய சங்கமம் 2023 நிகழ்ச்சியில் அற்புதமாக பரதநாட்டியம் ஆடிய மாணவி பிரணவதி என்பவர் முதல் பரிசான ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தட்டிச் சென்றார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 23, 2023, 6:49 PM IST

வேலூர் நாட்டிய சங்கமம் 2023: மாணவி பிரணவதிக்கு முதல் பரிசான ரூ.1 லட்சம் மதிப்புள்ள 'வைரம்'

வேலூர்: வேலூரில் முதன்முறையாக மாணவியர்களுக்கான (Vellore Natya Sangamam 2023) பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் வென்ற மாணவியர்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள 'வைரம்' பரிசாக வழங்கப்பட்டது.

வேலூர் நாட்டிய சங்கமம் 2023 இறுதிப் போட்டியில் பிட்ஜி குளோபல் பள்ளி என்ற தனியார்ப் பள்ளியில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவியர்கள் கலந்துகொண்டனர். முதல் பரிசான ரூ.1 லட்சம் மதிப்புள்ள 'வைரம்' இப்போட்டியில் சிறப்பாக நடனமாடிய மாணவி பிரணவதி என்பவர் தனது அற்புதமான நாட்டியத்தால் தட்டிச் சென்றார். இதனைத்தொடர்ந்து இரண்டாம் பரிசான பிளாட்டினத்தை மாணவி ஜோஸ்மாவும், மூன்றாம் பரிசான தங்கத்தை மாணவி ப்ரீத்தியும் தட்டிச் சென்றனர்.

மேலும், சிறப்புப் பரிசாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு 5 ஆயிரம் மதிப்புள்ள காசோலையும் வழங்கப்பட்டது. பார்வையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நன்கொடை தொகையைச் சிறப்பாகச் செயல்பட்ட நடன குழுக்களுக்கும் நடனப் பயிற்சி மையங்களுக்கும் ஊக்கத்தொகையாகவும் மற்றும் இசைக்கருவிகளாகவும் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கலைஞர் நதியா மயூரி மற்றும் நடிகை சுதா சந்திரன், வித்யாலஷ்மி வித்யாந்த் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில், 12 வயதுக்குட்பட்டவர்கள், 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் மாணவர்களிடையே கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும் மாணவர்கள் தங்களின் நடன திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியதை, நடுவர்கள் கண்டு வியந்தனர்.

இந்த நடன விழாவிற்கு, தனியார் பள்ளி குளோபல் பள்ளி முதல்வர், பேராசிரியர் அன்குர் ஜெயின் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜே.எம்.புவனேஸ்வர் பள்ளியின் துணை முதல்வர் அர்னாப் குமார் கங்குலி, பிடிஜி குளோபல் பள்ளியின் கல்வி இயக்குனர் நிஷாந்த் திரிபாதி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் நாட்டிய சங்கமம் 2023 போட்டியின் பரிசுத்தொகையான ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 'வைரம்' வெற்றி பெற்ற மாணவரின் நடன திறனைப் பாராட்டிய நடுவர் அவர்கள் இளம் தலைமுறையினரிடம் இத்தகைய பாரம்பரிய கலாச்சார நடன திருவிழாவை கொண்டு சென்ற பிட்ஜி குளோபல் பள்ளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகக் கூறினார்.

இதையும் படிங்க: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் - உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.