வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் சாதிக்பாட்ஷா நகர் பகுதியில் தனியார் பீடி இலை சேமிப்பு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று, எதிர்பாராதவிதமாக, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பீடி இலை குடோனை உடைத்து பல மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தினால், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலை பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் இச்சம்பவம் குறித்து ஆற்காடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.