திருப்பத்தூர் அடுத்த ஆசிரியர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன்(40). இவர் வெங்களாபுரம் பகுதியில் டைல்ஸ் மற்றும் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு குபேந்திரன் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நள்ளிரவில் கடையில் இருந்து அதிகளவில் புகை வருவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கும் மற்றும் உரிமையாளர் குபேந்திரனுக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.50லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூரில் வெடித்த மர்மப் பொருள்? - நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த தம்ப
தி