ETV Bharat / state

ராணிப்பேட்டையில் ஓடும் காரில் பைனான்சியரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை!

Vellore Crime news: ராணிப்பேட்டையில் பைனான்சியரின் காரை மடக்கி 15 லட்சம் ரூபாயைத் திருடிச் சென்றவர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 9:38 AM IST

Updated : Nov 8, 2023, 1:18 PM IST

ராணிப்பேட்டை: அம்மூரைச் சேர்ந்தவர், சரவணன் (45). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று (நவ.7) இரவு சித்தூரில் இருந்து தனது காரில் பொன்னை, கத்தாரிக்குப்பம் வழியாக அம்மூர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது, இவரது காரில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், சித்தூரில் இருந்து பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், கத்தாரி குப்பம் அருகே வந்தபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரவணனின் காரை மடக்கி உள்ளனர். மேலும், சரவணனை மிரட்டி காரில் வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, மர்ம நபர்கள் தப்பிச் சென்ற கார் சிறிது தூரத்தில் வயலின் ஓரமாக சிக்கிக் கொண்ட நிலையில், நம்பர் பிளேட் இல்லாத காரை அங்கேயே விட்டு விட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் சரவணனின் கார் மற்றும் கொள்ளையர்களின் கார் ஆகிய இரண்டு கார்களை பறிமுதல் செய்த சிப்காட் போலீசார், தப்பி ஓடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். அது மட்டுமல்லாது, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈசிஆரில் கணவன், மனைவியை மாற்றிக் கொள்ளும் மது, மாது விருந்து.. பலே கும்பல் சிக்கியது எப்படி?

Last Updated : Nov 8, 2023, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.