வேலூர்: காட்பாடி அடுத்த மகிமண்டலம் ஊராட்சி தாதிரெட்டிபள்ளி கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்த முயல்வதை கைவிட வேண்டும் என 50க்கும் அதிகமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், "சிப்காட் அமைக்க உள்ள இடத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எங்களது பட்டா விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
கடந்த (மே1)ஆம் தேதி கிராமசபை கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றியதாகவும், நிலம் கையகப் படுத்தப்பட்டால் சுமார் 1000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்" எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிப்காட் அமைப்பதற்கு எதிராக 75ஆவது நாளாகப் போராடும் பாலியப்பட்டு கிராம மக்கள்