ETV Bharat / state

கள்ளச்சாரய விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி மனு! - illegal Liquor sale at Vellore District

வேலூர்: கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கக் கோரி தேசிய உழவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயி சதானந்தம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Farmer gave  petition
Farmer gave petition
author img

By

Published : Dec 16, 2019, 10:54 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) வழக்கம்போல் குறைதீர் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றதால் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிலையில் தேசிய உழவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயி சதானந்தம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் காலிக் கவர்களுடன் மனு அளிப்பதற்காக வந்ததால் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, சாராயக் கவர்களை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என்று காவல்துறையினர் அவரிடம் கூறியுள்ளனர். அதற்கு சதானந்தம், "கள்ளச்சாரய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் 150 முறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் தனது மனுவை அவர் அளித்தார்.

கள்ளச்சாரய விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி மனு!

அந்த மனுவில், "மேல் அரசம்பட்டு கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதனால், பலரும் உயிரிழக்கும் சம்பவம் நடக்கிறது. அதுமட்டுமல்லாது கள்ளச்சாராய விற்பனையால் எங்கள் ஊரில் அடிக்கடி திருட்டுச் சம்பவம் நடைபெறுவதால், கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அச்சம் அடைகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: என்கவுன்ட்டர் - காவல் துறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Intro:வேலூர் மாவட்டம்

கள்ளச்சாராயம் விற்பனையால் ஊரே சீரழிகிறது- நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனுBody:வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழக்கம்போல் திங்கள்கிழமை குறைதீர் முகாம் நடைபெற்று வந்தது மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றதால் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார் இந்த சூழ்நிலையில் தேசிய உழவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயி சதானந்தம் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் காலிக் கவர்களுடன் மனு அளிப்பதற்காக வந்தார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சாராயக் கவர்களை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை நீங்கள் மட்டும் சென்று மனு அளியுங்கள் என்று கூறினார் அதற்கு சதானந்தம் நான் ஆட்சியரிடம் இந்த கள்ளச்சாராய கவர்களை கொண்டு காண்பிக்க வேண்டும் எனவே எனக்கு அனுமதி தாருங்கள் எங்கள் ஊரில் கள்ளச்சாராய விற்பனை தினமும் நடைபெறுகிறது பலர் உயிரை இழக்கின்றனர் 15 வருடங்களாக இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சியரிடம் 150 முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தார் அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் தனது மனுவை அளித்தார் அந்த மனுவில், மேல் அரசம்பட்டு கிராமத்தில் கள்ளச்சாராயம் பல ஆண்டுகளாக விற்பனை செய்கிறார்கள் எங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கள்ளச்சாராயம் விற்பதுடன் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ரவுடியிசம் செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள் கள்ளச்சாராய விற்பனையால் எங்கள் ஊரில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுகிறது கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சம் அடைகின்றனர் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார் வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் குறைதீர் முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.