வேலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வயதான கேசவன் - நாகம்மாள் தம்பதி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். பின்னர் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் இருவர் மீதும் தண்ணீர் ஊற்றி அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவுக்கு அழைத்து சென்று இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் விசாரணையில், காட்பாடி அடுத்த பொன்னை எஸ்.என். பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளில் சுமார் நான்கு விவசாயிகளின் விளை நிலங்களை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக சிலர் விவசாய நிலங்களில் கம்புகளை நட்டு ஆக்கிரமித்து இருப்பதாகவும் பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை இல்லாததால், தங்களது விளை நிலங்களை காப்பாற்றி தரக்கோரி இன்று(டிச. 14) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளனர். அப்போது இந்த தம்பதிகள் தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: 'அழுதல்' உங்கள் ஆரோகியத்திற்காக எடுக்கும் தைரியமான முடிவு!