ETV Bharat / state

திமுக பிரமுகர்கள் மிரட்டியதால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை - விவசாயி தற்கொலை

திமுக பிரமுகர்கள் மிரட்டியதாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படும் நபரின் உடலைக் காவல் துறையினர் எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 26, 2022, 10:57 PM IST

திமுக பிரமுகர்கள் மிரட்டியதால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

வேலூர்: பொன்னை அடுத்த பெரிய போடிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நாகேஷ் (50). இவரது நிலத்திற்கு அருகேவுள்ள விவசாய நிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது நிலத்துக்கு செல்ல நாகேஷ் நிலத்தில் வழி விடும்படி தொடர்ந்து பிரச்னை இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகேஷிக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாழை மரங்களைக் கிருஷ்ண தரப்பினர் சேதப்படுத்தியதாகவும், இது தொடர்பாக நாகேஷ் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மாறாக நாகேஷ் மற்றும் மனைவியையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் திமுகவைச் சேர்ந்த காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், பெருமாள்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் நாகேஷே மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நாகேஷ் இன்று (டிச.26) விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து திமுக பிரமுகர்கள் மிரட்டியதன் காரணமாகவே நாகேஷ் உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உறவினர்கள் மற்றும் பாமக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடலை உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்ல வந்த காவல் துறையினரைத் தடுத்து நிறுத்தி, உடலை வழங்க மறுத்தும் நாகேஷ் தற்கொலைக்குக் காரணமான திமுக பிரமுகர்களைக் கைது செய்யக் கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால், பெரிய போடி நத்தம் கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் தற்போதைக்கு சந்தேக மரணத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் விசாரணைக்குப் பிறகு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து உறவினர்கள் உடலைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து விவசாயி நாகேஷின் உடல் உடற்கூராய்வுக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மேல்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றிய குழு பெருந்தலைவராக உள்ள திமுக பிரமுகர் மற்றும் திமுக கட்சியினரால் விவசாயி மிரட்டப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடிகை துனிஷா தற்கொலை வழக்கிற்கும், ஷ்ரத்தா கொலை வழக்கிற்கும் என்ன தொடர்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.