ETV Bharat / state

எங்களுக்கு நியாயம் வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - தீக்குளிக்க முயற்சி

வேலூர்: வனச்சரகர் ஒருவரின் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

burn themselves
author img

By

Published : May 30, 2019, 5:59 PM IST

வேலூர் மாவட்டம் ஆற்காடு புங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழக வனத்துறையில் வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் வனச்சரகராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் லஞ்சப் புகாரில் சிக்கிய ராஜா சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் ராஜாவின் மனைவி மாலதி மே மாதம் 6ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கணவர் ராஜா மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தனது கணவர் தனக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னையும் தனது இரண்டு மகன்களையும் கவனிப்பதில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலரை அணுகும்படி மாலதிக்கு பிற வன அலுவலர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாலதி புகார் அளித்தார். ஆனால் இதுவரை வனச்சரகர் ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரத்தில் மாலதி மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் மாலதியின் மகன்கள் சச்சின், நெல்சன் ஆகியோரும் உடன் வந்தனர். அப்போது திடீரென மாலதியின் இரண்டு மகன்களும் மறைத்து வைத்திருந்த கெரசினை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதை கவனித்த காவலர்கள் ஓடிச் சென்று இரண்டு பேரிடமும் இருந்த கெரசின் கேனை பறித்தனர். இதற்கிடையில் மாலதியும் தான் மறைத்து வைத்திருந்த கெரசினை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

ஆனால் போலீசார் அவரிடமும் இருந்து கேனை பறித்தனர். போலீஸார் தடுத்தபோது மாலதியின் 2 மகன்களும் எங்களுக்கு நியாயம் வேண்டும், எங்களை வாழவிடுங்கள் அல்லது சாக விடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறிய சம்பவம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து 3 பேரையும் மீட்டு சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:எங்களுக்கு நியாயம் வேண்டும் -

வனச்சரகரின் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Body:வேலூர் மாவட்டம் ஆற்காடு புங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழக வனத்துறையில் வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் வனச்சரகக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் லஞ்சப்புகாரில் சிக்கிய ராஜா சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் இதற்கிடையில் ராஜாவின் மனைவி மாலதி கடந்த மே மாதம் ஆறாம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கணவர் ராஜா மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார் அந்த புகாரில் தனது கணவர் தனக்கு தெரியாமல் இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டு தன்னையும் தனது இரண்டு மகன்களையும் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார் இதையடுத்து மாவட்ட வன அதிகாரியை அணுகும்படி மாலதிக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர் அதன்படி மாவட்ட வன அதிகாரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாலதி புகார் அளித்தார் ஆனால் இதுவரை வனச்சரகர் ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரத்தில் இன்று மாலதி மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் அவருடன் மாலதியின் மகன்கள் சச்சின் மற்றும் நெல்சன் ஆகியோரும் உடன் வந்தனர் அப்போது திடீரென மாலதியின் இரண்டு மகன்களும் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது இதை கவனித்த போலீசார் ஓடிச் சென்று இரண்டு பேரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனே பறித்தனர் இதற்கிடையில் மாலதியும் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் ஆனால் போலீசார் அவரிடம் இருந்து கேனை பறித்தனர் பின்னர் மாலதியின் மகன்கள் மீது தண்ணீர் ஊற்றி போலீசார் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார் இச்சம்பவத்தால் வேலூர் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது போலீஸார் தடுத்தபோது மாலதியின் 2 மகன்களும் எங்களுக்கு நியாயம் வேண்டும் எங்களை வாழவிடுங்கள் அல்லது சாக விடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறிய சம்பவம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது இதையடுத்து 3 பேரையும் மீட்டு சத்துவாச்சாரி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் தங்கள் பிரச்சனையை தீர்க்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகின்றனர் ஆனால் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது அந்த வகையில் வனச்சரகர் மனைவி தன் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரத்தில் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.