வேலூர்: திருவாரூர் மாவட்டம் மேல எருக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரான இவர் கடந்த 2012 - 2016ஆம் ஆண்டுகள்வரை வருமானத்திற்கு அதிகமாக 53 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்வரை சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் வேலூர் காட்பாடியில் உள்ள வி.ஜி.ராவ் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (அக்.7) காலை முதல் சேதனை நடைபெற்று வருகிறது. இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எடியூரப்பா நெருங்கிய உதவியாளர் வீட்டில் சோதனை!