வேலூர்: தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் களைகட்டியுள்ள நிலையில் தொண்டர்கள் அனைவரும் தங்களின் தலைவர்களுக்காக நூதன செயல்பாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள ரத்தினகிரி முருகன் கோயிலில் இன்று(மார்ச். 16) வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக வேண்டி மொட்டை அடித்து வேண்டிக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதனை அறிந்த வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுகவின் வேலூர் மாவட்ட செயலாளருமான எஸ்ஆர்கே அப்பு நேரில் சென்று தொண்டர்களுக்கு ஆதரவளித்தார்.