ETV Bharat / state

நில ஆக்கிரமிப்பு செய்தாரா திமுக பிரமுகர்? - நடந்தது என்ன?

வேலூர் மாவட்டத்தில் 10 கோடி மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பதாக தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை அறுத்து வீசியதாக எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

Etv Bharatநில ஆக்கிரமிப்பு செய்த திமுக பிரமுகரை தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை அறுத்ததாக புகார்

author img

By

Published : Dec 2, 2022, 3:14 PM IST

வேலூர்: அணைக்கட்டு மெயின் பஜார் வீதியைச் சேர்ந்தவர், காந்தி. இவரது சகோதரர் சுப்பிரமணி. இவர்களுக்கு சொந்தமாக ஊனை வாணியம்பாடி மதுரா ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலம் உள்ளது. அந்நிலத்தை அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன் என்பவர் அபகரித்துவிட்டதாக காந்தி மற்றும் சுப்பிரமணி குடும்பத்தினர் வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகார் மனுவில், "ஊனை வாணியம்பாடி மதுரா, ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள எங்களது நிலத்தில் திமுக அணைக்கட்டு ஒன்றியச்செயலாளர் வெங்கடேசன் ஜேசிபி மூலம் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இதை காந்தி மற்றும் சுப்பிரமணியின் மகன்கள், மகள்கள் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது கவிதா என்ற பெண்ணின் தாலியை அறுத்துவீசியுள்ளார், வெங்கடேசன்.

மேலும் அங்கிருந்த ஆட்களை வைத்து தாக்கி, நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடியாட்களை வைத்து குடும்பத்தையே கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். எங்களது நிலத்தின் பட்டா மற்றும் வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் புகார் மனு உடன் இணைத்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்.பி. அலுவலக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

நில ஆக்கிரமிப்பு செய்தாரா திமுக பிரமுகர் - தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை அறுத்ததாகப் புகார்

இதையும் படிங்க:பேடிஎம் க்யூஆர் கோடை வைத்து டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளர் சஸ்பெண்ட்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.