திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட திமுக சார்பில் சிறுபான்மையினர் மற்றும் ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், “மத்திய அரசு திருட்டுத்தனமாக ஒரு நாள் முன்னரே சட்டம் இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவருகிறது. ஆனால் ஒரு சட்டத்தை இயற்ற ஒரு மாதம் முன்னாடியே அரசாணை தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் இதை மத்திய அரசு தவிர்த்து வருகிறது.
அதேபோல் நாடாராளுமன்றத்தில் இஸ்லாமியர்களை முற்றிலுமாக தவிர்த்துவருகின்றனர். மத்திய அமைச்சர்கள் இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்ற வேண்டும் என்றுதான் இது போன்று செயல்படுகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க...குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்: காலி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் போட்டி