ETV Bharat / state

சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர்: வேலூர் அருகே கண்கலங்க வைக்கும் சம்பவம்! - snake bitten

வேலூர் அருகே பாம்பு கடித்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு செல்ல முயன்ற நிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை வசதி இல்லாததால் குழந்தையின் உயிர் பரிபோன பரிதாபம்

author img

By

Published : May 29, 2023, 10:57 PM IST

சாலை வசதி இல்லாததால் குழந்தையின் உயிர் பரிபோன பரிதாபம்

வேலூர்: அணைக்கட்டு வட்டம் அல்லேரி மலைக் கிராமத்துக்கு உட்பட்ட அத்திமரத்துக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி விஜி. இவரின் மனைவி பிரியா. இவர்களின் ஒன்றரை வயது தனுஷ்கா என்ற பெண் குழந்தை வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தது. அப்போது, அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து ஊர்ந்து வந்த விஷப் பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. குழந்தையின் அழுகை சப்தம் கேட்டு வெளியே சென்ற பெற்றோர், குழந்தையை பாம்பு கடித்துள்ளதை கவனித்துள்ளனர்.

மலைக் கிராமத்தில் மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால், சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மலைக் கிராமத்துக்கு போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், மருத்துவமனைக்குச் செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அதற்குள் குழந்தையிம் உடல் முழுவதும் விஷம் பரவி குழந்தை வழியிலேயே உயிரிழந்தது. இந்த நிலையில், உடல்கூறு பரிசோதனை முடிந்து குழந்தையின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மலைக் கிராமத்துக்கு போதிய சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் தொடர்ந்து செல்ல வழியின்றி, குழந்தையின் உடலை பாதி வழியிலேயே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, குழந்தையின் சடலத்தை பெற்றோர் சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வந்துள்ளனர். அதற்கு மேல் இருசக்கர வாகனத்திலும் செல்ல சரியான பாதை இல்லாததால், குழந்தையின் சடலத்தை பெற்றோர் மற்றும் குழந்தையின் உறவினர்கள் சுமார் 10 கி.மீ. தொலைவு கைகளில் தூக்கிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு சாலைகொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்ததுடன், சடலத்தை கிராமத்துக்கு வாகனத்தில்கொண்டு வரவும் முடியாமல் கைகளாலேயே பெற்றோர் தூக்கிச் சென்ற சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அல்லேரி மலைக் கிராமத்துக்கு அரசு விரைவில் சாலை வசதி மட்டுமன்றி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலுக்கும் கண்டனங்கள்:

பாஜாக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்த சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக பாஜக அல்லேரி மலைக்கிராமத்தில் பாம்பு கடித்ததில் ஒரு வயது குழந்தை இறந்த விவகாரத்தில் தமிழக அரசையே முழு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சிறிய, மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக வேலூர் போன்ற மாநகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால், இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கப்பட் நிதி என்ன ஆனது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்:

வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் மலைக்கிராமத்தில் அல்லேரி இன்று நேரில்ஆய்வு மேற்கொண்டதுடன் பாம்புகடியால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அல்லேரிமலைக்கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஒன்றரை வயது குழந்தையை பாம்பு கடித்துள்ளது. அதேசமயம், இந்த மலைக்கிராமத்தில் ஏற்கனவே சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு அவரது தொடர்பு எண்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் குழந்தையை பாம்பு கடித்துவிட்ட பதற்றத்தில் பெற்றோர் இந்த மலைக்கிராம சுகாதார செவிலியரை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டுச்சென்றுள்ளனர். அப்போதுதான் குழந்தை உயிரிழந்துள்ளது. சாலையை பொறுத்தவரை அனைத்து மலைக்கிராமங்களிலும் ஊரக வேலையுறுதித் திட்டத்தின்கீழ் செம்மைப்படுத்தி போக்குவரத்துக்கு ஏற்ற வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அல்லேரி சாலைகளை மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் தார்சாலை அமைக்கப்படவுள்ள நிலையில் அதற்குள் இந்த துயர நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் சாலையை மலைக்கிராமங்களிலும் ஊரக அனைத்து சாலைகளை வேலையுறுதித் திட்டத்தின்கீழ் செம்மைப்படுத்தி ஏற்ற வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்று அடுத்து ஒரு நிகழ்வு ஏற்படாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இங்கு கிளை சுகாதார நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரும், தலைமைச்செயலரும் உத்தரவிட்டுள்ளனர்.

அதனடிப்படையில், விரைவில் அல்லேரி மலைக்கிராமத்துக்கு தார் சாலை அமைக்கப்படும். மேலும் ஏதேனும் குறைகள் இருந்தால் அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து சாலை அமைக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவி கத்தியால் குத்தி கொடூர கொலை.. தலைமறைவு இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.