மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வரும் இலவச ஸ்மார்ட் போன் இதுவரை வழங்காமல் அலைகழிப்பதாகவும், வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு ஒருதலைபட்சமாக செயல்படுவதால் அவரை உடனடியாக மாற்றக்கோரி வேலூர் அண்ணா சாலையில் 40க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நேற்று (ஜனவரி 20) தர்ணா போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், அலுவலர்களிடம் பேசி ஜனவரி 25ஆம் தேதிக்குள் இலவச ஸ்மார்ட் போன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.