ETV Bharat / state

பேராசையால் ரூ. 2 கோடிக்கு மேல் இழந்த பைனான்சியர் - மோசடி செய்தவர் கைது! - வேலூர் செய்தி

வேலூர்: பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரிடம், ரியல் எஸ்டேட் தொழில் செய்யவுள்ளதாகக் கூறி ரூ. 2.75 கோடி பணம் வங்கி திருப்பி தராமல் ஏமாற்றிய ஆசாமியை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

Vellore police station
author img

By

Published : Sep 7, 2019, 5:45 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேகர்(65) என்பவர் பல ஆண்டுகளாக பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு வேலூர் வாணி தெருவைச் சேர்ந்த மகாதேவ் சர்மா(40) என்பவர் சேகரை தொடர்பு கொண்டு தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவுள்ளதாகவும், அதற்க்காக 2.75 கோடி ரூபாய் கடனாக வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

கடனை திரும்ப செலுத்தும்போது தனது லாபத்தில் பாதியை தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி சேகர் 2.75 கோடி ரூபாயை கடனாக மகாதேவ் சர்மாக்கு வழங்கியுள்ளார். வாக்குறுதி அளித்தபடி மகாதேவ் சர்மா ரியல் எஸ்டேட் செய்யாமல் ஏமாற்றி வந்த நிலையில் தனது பணத்தை திருப்பி தருமாறு சேகர் கேட்டுள்ளார். ஆனால், பணம் திரும்ப வராத நிலையில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் சேகர் புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மகாதேவ் சர்மா வேலூர் அடுத்த வசூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் துணை காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம் மற்றும் ஆய்வாளர் திருமால் ஆகியோர் தலைமையில், காவல்துறையினர் அங்கு சென்றபோது மகாதேவ் சர்மா கையும் களவுமாக சிக்கினார். பின்னர் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Intro:வேலூரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதாக கூறி 2.75 கோடி மோசடி செய்த பலே ஆசாமி கைதுBody:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(65). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் இந்நிலையில் வேலூர் வாணி தெருவைச் சேர்ந்த மகாதேவ் சர்மா(40) என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சேகரை தொடர்புகொண்டு தான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்ய போவதாகவும் அதற்கு 2.75 கோடி கடன் கொடுத்தால் எனது தொழிலில் வரும் லாபத்தை நாம் இருவரும் பங்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார் இதை நம்பிய சேகர், மகாதேவ் சர்மாவிடம் 2.75 கோடி கடன் கொடுத்துள்ளார் ஆனால் வாக்குறுதி அளித்தபடி மகாதேவ் சர்மா ரியல் எஸ்டேட் செய்யாமல் பணத்தை ஏமாற்றியுள்ளார் இதையடுத்து பணத்தை திரும்ப தரும்படி சேகர் பலமுறை கேட்டும் மகாதேவர் சர்மா கொடுக்கவில்லை இதையடுத்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் சேகர் புகார் மனு அளித்தார் அதன் பேரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர் இந்த நிலையில் வேலூர் அடுத்த வசூர் பகுதியில் மகாதேவ் சர்மா பதுங்கி இருப்பதாக நேற்று தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் துணை காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம் மற்றும் ஆய்வாளர் திருமால் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மகாதேவ் சர்மாவை கையும் களவுமாக பிடித்தனர் பின்னர் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளினர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.