ETV Bharat / state

'ஜூன் மாதம் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டும்' - சிஎம்சி மருத்துவ ஆராய்ச்சி குழு தகவல் !

வேலூர்: கரோனா மூன்றாவது அலை காரணமாக ஜூன் மாதம் 2ஆவது வாரத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டும் என சிஎம்சி மருத்துவ ஆராய்ச்சி குழு தகவல் தெரிவித்துள்ளது.

CMC Medical Research
CMC Medical Research
author img

By

Published : May 9, 2021, 12:20 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தலைமையில் இன்று (மே‌. 08) நடைபெற்றது. அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி நந்தகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அமுலு, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தாவது,`வேலூர் மாவட்டத்தில் தற்போது கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு கரோனா பாதிப்பின்போது பாதிக்கப்பட்ட 100 பேரில் 5 அல்லது 6 பேருக்குத் தான் ஆக்சிஜன், ஐசியு வார்டு தேவைப்பட்டன. ஆனால், தற்போது 100க்கு 40 விழுக்காட்டினருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

வருகின்ற அக்டோபர் மாதம் மூன்றாவது அலை வர உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்போதே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த முடியும். மூன்றாவது அலையின் போது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படுபவர்களுக்கு 2 அல்லது 3 நாள்களிலேயே ஆக்சிஜன் தேவைப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மூலம் மட்டுமே கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும். சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இருப்பினும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூர் சிஎம்சி மருத்துவ ஆராய்ச்சி குழு அவ்வப்போது அரசுக்கு சில பரிந்துரைகளை செய்து வருகிறது.
அதன்படி வருகிற ஜூன் மாதம் 3ஆவது வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் தற்போது தினசரி 600 ஆக உள்ள பதிப்பு 2000 ஆக அதிகரிக்கும். தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு ஜூன் இரண்டாவது வாரத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது பாதிப்பு அதிகமாக உள்ளது. நகராட்சி பேரூராட்சி பகுதிகளிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .

கரோனா மூன்றாவது அலையின் போது தினசரி 4 ஆயிரம் பேர் வரை சிகிச்சையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்குத் தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்` என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.