வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது கதிர்குளம் கிராமம். இங்கு 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் இந்திராம்மாள்(51) என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. வீட்டின் அருகே கொட்டகையில் பசுமாடு மற்றும் கன்று குட்டியை கட்டி வைத்திருந்தார்.
அந்திர வனப்பகுதியில் இருந்து வந்த சிறத்தை ஒன்று கன்றுக் குட்டியை கடித்து கொன்று விட்டு அங்கிருந்து சென்றது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த வந்த வனத்துறையினர், இறந்த கன்றுக் குட்டி உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டுச் செல்ல வேண்டாம் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், கால்நடை மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுச் செல்லாமல் பட்டியில் கட்டி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆண்டிபட்டியில் மகளைக் கொலை செய்த தந்தை!