வேலூர் மாவட்டம் ணிகவரித் துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தற்போது குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிறப்பு பிரிவில் 20 படுக்கைகள் உள்ளன.
தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்படுத்தி தர அரசு தயாராக இருக்கிறது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் உலக சுகாதார அமைப்பு கூறும் அறிவுரையைவிட ஒருபடி மேலே முதலமைச்சர் பழனிசாமி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலை புரிந்துகொண்டு இளைஞர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனங்கள் மீது வழக்குப்பதிவு