திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், வேலூரில் இன்று (நவம்பர் 21) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், கல்வி கட்டணத்துக்காக திமுகவை நாடலாமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதலளித்த துரைமுருகன், அந்த கட்டணத்தைக் கூட மாணவர்களால் கட்ட முடியவில்லை என்றால் எதற்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று கூறினார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.