ETV Bharat / state

வேலூரில் பேருந்துகள் இயங்க, டாஸ்மாக் கடை திறக்க ஆட்சியர் உத்தரவு - நிவர் புயல் கரையை கடந்தது

வேலூர்: காற்றின் வேகம் குறைந்துள்ளதால் பேருந்துகளை இயக்கவும், டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் வேலூர் ஆட்சியர் சண்முசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

vellore
vellore
author img

By

Published : Nov 26, 2020, 6:28 PM IST

நிவர் புயல் காரணமாக நேற்று (நவ. 25) மாலை 6 மணிமுதல் வேலூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டுவந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. மழை குறைந்ததால் இன்று (நவ. 26) மாலை 3 மணிமுதல் பேருந்துகளை இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார்.

அதன்படி தேவைக்கேற்ப இன்று (நவ. 26) மாலை 3.30 மணிமுதல் வேலூரிலிருந்து காட்பாடி, பாகாயம், ஆற்காடு, சென்னை, தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு, ஆம்பூர், வாணியம்பாடி, ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது. குடியாத்தம், பள்ளிகொண்டா, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் இவ்வழித்தடங்களில் பேருந்து இயக்கம் இல்லை.

அதேபோன்று, நிவர் புயல் காரணமாக நேற்று (நவ. 25) மாலை 5 மணிமுதல் இன்று (நவ. 26) மாலை 4 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட அறிவிக்கப்பட்டது. தற்போது, எதிர்பார்த்த அளவு காற்றின் வேகம் இல்லாததால் டாஸ்மாக் கடைகள் இன்று (நவ. 26) மதியம் 12 மணிக்கு திறக்க ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், கனமழை பெய்துவரும் சூழலில் கடை திறப்பது கடினமானது என டாஸ்மாக் மேலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ’இரவுக்குள் 80% மின் இணைப்புகள்’ - அமைச்சர் தங்கமணி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.