வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன், உடல் நலக்குறைவால் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். ஆகையால், இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணியை அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.
![குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தல் மின்னணு வாக்கு இயந்திரம் சரிபார்ப்பு gudiyatham voting machine check gudiyatham assembly election gudiyatham mla](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-03-collector-inspects-preliminary-check-on-evm-machines-vis-scr-pic-tn10018_27072020124725_2707f_1595834245_315.jpg)
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி காலியாகவுள்ளது. இதற்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதற்கு தயாராக முன்னேற்பாடுகளைச் செய்ய தேர்தல் ஆணையம் கூறியது.
இதனால், வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள 831 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப்பணிகள் அடுத்த 20 நாள்களுக்கு நடைபெறும். மொத்தம் தொகுதியிலுள்ள 290 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள 831 பயன்படுத்தப்படவுள்ளன.
தற்போது வேலூரில் ஊரடங்கில் கட்டுப்பாட்டை அதிகப்படுத்தும் நிலை இல்லை. தமிழ்நாடு அரசு கூறுவதை பின்பற்றவுள்ளோம். இதுவரை மாவட்டத்தில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேலூரில் 5 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு