வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்துக் கடைகளும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், நாளை முதல் புதிய தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார். அதன்படி, "இதுவரை ஊரகப் பகுதிகளில் மட்டுமே தேனீர் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இனி நகரப் பகுதிகளிலும் தேனீர் கடைகள் திறக்கலாம். ஆனால், தேனீர் கடைக்காரர்கள் மக்களுக்கு பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.
தேனீர், காய்கறி, மளிகை, இறைச்சி, முடிதிருத்தம் கடைகள் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். அப்போது குளிர் சாதனம் பயன்படுத்தக்கூடாது.
குறிப்பாக, முடிதிருத்தம் கடைகளைத் தவிர ஸ்பாக்கள், அழகு நிலையங்களுக்கு ஜூலை 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. வேலூரின் முக்கிய மார்கெட்டான நேதாஜி மார்கெட், மண்டித்தெரு, லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இந்தத் தளர்வு பொறுந்தாது, தடை நீடிக்கும். தளர்வு அளிக்கப்பட்டுள்ள கடைகள் அரசு கூறிவரும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் தளர்வுகள் - பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்