ETV Bharat / state

குழந்தைகள் ஆபாச படத்தைப் பகிர்ந்தவர் கைது - போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நியாஸ்

வேலூர்: குழந்தைகளின் ஆபாச படங்களைப் பதிவிறக்கம் செய்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞரை காவலர்கள் கைதுசெய்தனர்.

child porn video download young man arrest
குழந்தைகள் ஆபாச படம் பதிவிறக்கம் செய்த இளைஞர் கைது
author img

By

Published : Mar 5, 2020, 8:33 AM IST

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலை்தளங்களில் பகிர்ந்த வேலூர் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நியாஸ் (31) என்பவரைக் காவலர்கள் கைதுசெய்தனர்.

இவரிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட செல்போன், மெமரி கார்டுகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளின் ஆபாச படங்கள் காணப்பட்டன. கைதுசெய்யப்பட்ட நியாஸ் மீது தகவல் தொழிற்நுட்பச் சட்டம், போக்சோ ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நியாஸ், பின்னர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

குழந்தைகள் ஆபாச படம் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதல்முறையாக குடியாத்தம் காவல் துறையினர் இளைஞர் ஒருவரை கைதுசெய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் ஆபாச படம் பதிவிறக்கம் செய்த வாலிபர் கைது
கைது செய்யப்பட்ட நியாஸ்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவருகின்ற சூழலில் இதைத் தடுக்க குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களைப் பார்க்கவோ, அவற்றைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது இணையத்தில் பதிவேற்றம் செய்யவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'ஆத்திரத்தில் அவ்வாறு செய்தேன்'- ஷாரூக் வாக்குமூலம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.