வேலூர் மாவட்டத்தை அடுத்த அரப்பாக்கத்தில் பள்ளி மாணவிக்கு ஒருவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக நேற்று முன்தினம் (பிப். 02) இரவு மாவட்ட குழந்தைகள் உதவி எண் (Childline) அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சமூகநலத்துறை, குழந்தைகள் உதவி எண் அலுவலர்கள் (Childline Officers) மற்றும் சத்துவாச்சாரி காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்தனர்.
அப்போது 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 19 வயது நிரம்பிய இளைஞருக்கும் நேற்று (பிப். 03) காலை அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் அந்த திருமணத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று அலுவலர்கள் இருதரப்பு பெற்றோரிடமும் எழுதி வாங்கிக் கொண்டனர். திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட பின்பு அந்த மாணவி, குழந்தைகள் நலக்குழுமத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படிங்க: 850 குழந்தைத் திருமணங்களைத் தடுத்த தெரேசா கச்சிந்தமோட்டோ: யார் இவர்?