ETV Bharat / state

13 ஆயிரம் பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு குழு அமைப்பு - தலைமை தேர்தல் அலுவலர் தகவல் - 13 ஆயிரம் மாணவர்கள் குழுக்களாக பிரிப்பு

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரம் பள்ளிகளில் தேர்தல் குறித்த கல்வியறிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

sathya pratha sahoo
author img

By

Published : Nov 23, 2019, 12:29 AM IST

இந்தியா முழுவதும் பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு விழுக்காட்டை அதிகரிக்கும் வகையில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் "தேர்தல் கல்வி அறிவு குழுக்கள்" அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் இடம்பெறும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் விழிப்புணர்வு பாடல்களைப் பாடி உற்சாகமூட்டினர். நிகழ்ச்சியின்போது தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதில், " இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்வியறிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 5 ஆயிரத்து 796 உயர்நிலைப்பள்ளிகள், 7 ஆயிரத்து 809 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் சுமார் 13 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கோவை, திருச்சி, வேலூர், மதுரை ஆகிய மாவட்டங்களை நான்கு மண்டலங்களாக பிரித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய அவசியத்தையும், தேர்தல் குறித்தும் மாணவர்களுக்கு விளக்குவார்கள். நேற்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 100 பேர் பங்கேற்றனர்.

இவர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் மாணவர்கள் கவுன்சிலராக வந்து பயிற்சியளித்தால் தமிழ்நாட்டில் தேர்தல் குறித்த செய்தி மக்களிடையே சென்றடைய அதிக வாய்ப்புள்ளது. இதுவரை அளித்த விழிப்புணர்வு மூலம் 72% விழுக்காடு வாக்குப்பதிவு கடந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஆண்டுதோறும் 25 லட்சம் பேரை இணைக்க வேண்டும். ஆனால் நாம் 10 லட்சம் பேர்தான் இணைத்து வருகிறோம். எனவே இதுபோன்ற பள்ளியளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது இன்னும் அதிக வாக்காளர்களை இணைக்க முடியும் என" சத்ய பிரதா சாகு கூறினார்.

இதையும் படிங்க: வார்டு வரையறையால் 3 கி.மீ அலைச்சல் - அடையாள அட்டைகளுடன் தர்ணா!

Intro:வேலூர் மாவட்டம்

தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் பள்ளிகளில் தேர்தல் கல்வி அறிவு குழுக்கள் அமைப்பு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டிBody:நாடு முழுவதும் பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் "தேர்தல் கல்வி அறிவு குழுக்கள்" அமைக்கப்பட்டு உள்ளது இந்த குழுவில் இடம் பெறும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினார் நிகழ்ச்சியின்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் , " இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தமிழகத்தில் ஒவ்வொரு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்வி அறிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது உயர்நிலைப்பள்ளிகளில் 5796 மேல்நிலைப்பள்ளிகளில் 7809 என மொத்தம் சுமார் 13 ஆயிரம் பள்ளிகளில் இந்த குழுக்கள் ஆரம்பித்துள்ளோம் இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்க்காக கோவை திருச்சி வேலூர் மதுரை ஆகிய நான்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று நாம் ஏன் வாக்காளர் பட்டியலில் இணைய வேண்டும், தேர்தல் என்றால் என்ன என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இதைக் கேட்டு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கொண்டு சேர்ப்பார்கள் அதற்காக இந்த பயிற்சி வகுப்புகள் துவங்கி யுள்ளது இன்று வேலூர் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்கள் சேர்ந்த சுமார் 100 பேர் பயிற்சியில் பங்கேற்று உள்ளனர் இவர்களுக்கு பயிற்சி கொடுத்தவுடன் மாணவர்கள் கவுன்சிலராக வந்து பயிற்சி அளித்தால் தமிழகத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்படும் ஏற்கனவே அளித்த விழிப்புணர்வு மூலம் 72% சதவீதம் வாக்குப்பதிவு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் ஆண்டுதோறும் 25 லட்சம் பேரை இணைக்க வேண்டும் ஆனால் நாம் 10 லட்சம் பேர்தான் இணைத்து வருகிறோம் எனவே இதுபோன்ற பள்ளி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது இன்னும் அதிகம் பேரை இணைக்க முடியும என்றார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.