காந்தி ஜெயந்தி தினமான இன்று (அக். 02) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசால் ரத்துசெய்யப்பட்டன.
இதையடுத்து தடையை மீறி வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய நான்கு இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் உள்ளிட்ட 179 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, 144 தடை உத்தரவை மீறி நோய் பரவும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் இவர்கள் மீது வேலூர் மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கிராம சபைக் கூட்டம் நடத்திய ஸ்டாலின் மீது வழக்கு