ETV Bharat / state

பேருந்தின் மீது கார் மோதி விபத்து - பார்க்கச் சென்றவர் உயிரிழந்த பரிதாபம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதை பார்க்கச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அருகே விபத்து  திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்  பச்சக்குப்பம் அருகே விபத்து  thiruppathur district news  ambur accident  car and bus accident in ambur one died
சொகுசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
author img

By

Published : Jan 6, 2020, 6:10 PM IST

சேலம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி, அவருடைய மனைவி மலர்விழி, தனது மகன் அஜய் குமார் ஆகியோருடன் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்னைக்கு தனது காரில் சென்றுள்ளார்.

ஆம்பூரை அடுத்துள்ள பச்சக்குப்பம் தேசிய நெடுஞசாலை மேம்பாலம் மீது கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதியதால், எதிர்ப்புறம் வந்த தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

காரில் இருந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று பார்க்க பேருந்திலிருந்து இறங்கிய, தனியார் பேருந்தின் மாற்று ஓட்டுநர் முரளி (39) மேம்பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் காரிலிருந்து மூன்று பேரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து ஓட்டுநரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த காயமடைந்திருந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரில் பயணம் செய்த மூன்று பேருக்கும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!

Intro:ஆம்பூர் அருகே சொகுசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு....Body:

திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது அதிகாலை கார் தடுப்பு வேலி மோதி விபத்து

சேலம் பகுதியை சேர்ந்த செல்வமணி அவருடைய மனைவி மலர்விழி மகன் அஜய் குமார் ஆகியோர் மருத்துவம் பார்ப்பதற்காக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது அதனை தொடர்ந்து சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லக்கூடிய சாலையில் வந்துகொண்டிருந்த சொகுசு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் சொகுசுப் பேருந்து மாற்று ஓட்டுனர் தென்காசி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முரளி (வயது 39) என்பவர் பேருந்தில் இருந்து இறங்கிய போது மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது

பின்னர் சம்பவம் குறித்து அங்குவந்த கிராமிய போலீஸார் காரில் படுகாயமடைந்த மூன்று பேரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து ஓட்டுனரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவர் கொண்டு செல்லும் வழியில் ஓட்டுனர் முரளி பரிதாபமாக உயிரிழந்தார்

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் காரில் பயணம் செய்த 3 பேரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெறப்பட்டு பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.