அரசு உத்தரவின்படி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்றுமுதல் (ஏப்ரல் 20) மறு உத்தரவு வரும்வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வேலூர் மண்டலம் சார்பாக வேலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட ஊர்களுக்கு அட்டவணையில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து இயங்காது என்பதை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட் வேலூர் மண்டலத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து...
சென்னைக்கு-இரவு 7 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.
- தாம்பரம்-இரவு 7 மணி வரை
- காஞ்சிபுரம்-இரவு 8 மணி வரை
- திருத்தணி-இரவு 8 மணி வரை
பழைய பேருந்து நிலையத்திலிருந்து...
- பெங்களூரு-மாலை 4 மணி வரை
- ஒசூர்- மாலை 5.30 மணி வரை
- சேலம்- மாலை 4 மணி வரை
- திருப்பத்தூர்-இரவு 8 மணி வரை
- குடியாத்தம்-இரவு 9 மணி வரை
- திருச்சி- மாலை 2.30 மணி வரை
- கும்பகோணம்- மாலை 2.30 மணி வரை பேருந்து இயக்கப்படும்.
மேலும் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பயணிகள் ஏறி இறங்கிச் செல்வதைக் கண்காணிக்க பேருந்து நிலையங்கள், முக்கியப் பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் நியமனம்செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் வேலூர் மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.