ETV Bharat / state

கம்மவான்பேட்டை கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா! - வேலூர் மாவட்ட செய்திகள்

கம்மவான்பேட்டை கிராமத்தில் நடந்த மஞ்சு விரட்டு விழாவில் 150 க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

கம்மவான்பேட்டை கிராமத்தில் மஞ்சுவிரட்டு
கம்மவான்பேட்டை கிராமத்தில் மஞ்சுவிரட்டு
author img

By

Published : Jan 25, 2021, 5:52 AM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகேயுள்ள, அதிகமான ராணுவ வீரர்களை கொண்ட ராணுவப் பேட்டை எனப்படும் கம்மவான்பேட்டை கிராமத்தில் இன்று (ஜன.24) மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது.

இதில் கணியம்பாடி, கீழ்வல்லம், அலுமேலுரங்காபுரம், அனைக்கட்டு, ஒடுக்கத்தூர், கேவிகுப்பம் மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 150க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

இந்த மஞ்சு விரட்டில், குறைந்த நேரத்தில் அதிவேகமாக ஓடி இலக்கை கடந்த காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவைப் பார்க்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் பொதுமக்களும் கூடி நின்று காளைகள் மின்னல் வேகத்தில் ஓடியதை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

முதல் பரிசனான ரூ.70001யை அலுமேலுரங்காபுரத்தை சேர்ந்த கௌதம் என்பவருக்கு சொந்தமான காளை வென்றது. இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரத்தை கணியம்பாடியை சேர்ந்த நிலா என்பவருக்கு சொந்தமான காளையும், மூன்றாவது பரிசாக ரூ.35 ஆயிரத்தை கீழ்வல்லத்தை சேர்ந்த துர்கா என்பவரின் காளையும் வென்றன.

இதையும் படிங்க: அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு படையெடுத்த டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.