ETV Bharat / state

பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் மூன்று நாள்களுக்கு பிறகு சடலமாக மீட்பு! - body was recovered from palar river by fire department

வேலூர்: பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை மூன்று நாள்களுக்கு பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.

வேலூர்
வேலூர்
author img

By

Published : Dec 9, 2020, 8:20 PM IST

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் முனவர் பாஷா(17). இவர் தனது நண்பர் தப்ரேஷூடன், நேற்று முன்தினம் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது, நீரின் வேகத்தில் இருவரும் அடித்து செல்லப்பட்டனர். ஆனால், தப்ரேஷ் மட்டும் அங்கிருந்த செடியைப் பிடித்து தப்பிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆர்ற்காடு தீயணைப்பு துறை, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று(டிச. 09) காலை, அரக்கோணத்தை சேர்ந்த மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழுவினரும் படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சுமார் 2 கிமீ தூரத்தில் கீழ்விஷாரம் பாலாற்றில் உள்ள மணல் குவாரி அருகே முட்புதரில் பாஷா சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆற்காடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.