ETV Bharat / state

'கள்ளச்சாராயத்துக்கு கதர் வாரியம், கட்டப்பஞ்சாயத்துக்கு அறநிலை, நீர் தராதவருக்கு நீர்வளம்!'

மக்கள் விரோத செயல்களில் திமுக அரசு ஈடுபட்டுவருவதால் விரைவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும், இந்த மக்கள் விரோத ஆட்சியை மக்கள் விரைவில் அகற்றுவார்கள். அதற்கான நேரம் கனிந்துவருகிறது என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

விரைவில் திமுக ஆட்சி கவிழும்: அதற்கான நேரம் கனிந்து வருகிறது, முதலமைச்சர்  ஸ்டாலின்
விரைவில் திமுக ஆட்சி கவிழும்: அதற்கான நேரம் கனிந்து வருகிறது
author img

By

Published : Dec 17, 2021, 7:08 PM IST

வேலூர்: பெருமுகையில் பாஜகவின் கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் தொடங்கியது. இதனை இன்று (டிசம்பர் 17) பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா தொடங்கிவைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் தோற்றுவிட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனக் கூறினார்கள். ஆனால், அதனைச் செய்யாமல் மதுக்கடைகளின் திறப்பு நேரம் அதிகரித்துள்ளது.

முதலமைச்சர்  ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

மக்கள் விரோத திமுக

குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், அதனை வழங்காமல் அந்த நிதியை வழங்க கமிட்டி போடுவதாகத் தெரிவித்துள்ளார்கள். மக்கள் விரோத ஆட்சியில் ஈடுபட்டுள்ள திமுகவைப் பற்றி தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதனைத் தாங்க முடியாமல், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை அமைச்சர் காந்தி விமர்சனம் செய்துவருகிறார். திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தொகுதியான கொளத்தூரில் உள்ள ஔவை நகரில் வார்டு 60, 61 ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள், பூங்கா ஆகியவற்றை அமைக்க அங்கிருந்த 120 வீடுகள் இடிக்கப்பட்டுவருகின்றன. அவர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் மக்கள் விரோத செயல்களில் திமுக ஆட்சி செயல்பட்டுள்ளது.

காந்தி கண்ணீர் விட்டார்

இதுபோன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபட்டுவருவதால் விரைவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும், இந்த மக்கள் விரோத ஆட்சியை மக்கள் விரைவில் அகற்றுவார்கள். அதற்கான நேரம் கனிந்துவருகிறது. திமுக அரசு பொறுமை இழந்த அரசாகச் செயல்பட்டுவருகிறது. தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

விரைவில் திமுக ஆட்சி கவிழும் அதற்கான நேரம் கனிந்து வருகிறது

காந்தி நூறாண்டுகளுக்கு முன்பு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரும்போது கண்ணீர் விட்டார். இவ்வளவு புனிதமான கோயில் இருக்கும் இந்தப் பகுதியில், அசுத்தங்களை எல்லாம் தாண்டிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என வருத்தம் அடைந்தார்.

இதனைக் கருத்தில்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காசி விஸ்வநாதர் ஆலயத்தைப் புனரமைப்பு செய்து ஐந்து லட்சம் சதுர அடியாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்த இடங்களையெல்லாம் விலைக்கு வாங்கி, அங்கிருந்தவர்களுக்கு எல்லாம் மாற்று இடம் வழங்கப்பட்ட பின்னரே இந்த காசி விஸ்வநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டது.

பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர்

இதன்மூலம் புனித நகரமான காசியை மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், ஆன்மாவுக்குப் புத்துயிர் ஏற்படுத்தியுள்ளார். பிரதமர் இப்படிச் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய தொகுதியில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, அங்கிருந்த மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யாமல் அவர்களின் வீடுகளை இடிப்பது கண்டிக்கத்தக்கது" எனக் கூறினார்.

இதனையடுத்து, செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஹெச். ராஜா, "2001ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது அந்த மாநிலத்தில் மழை நீர் வீணாகாமல் இருப்பதற்காக லட்சக்கணக்கான தடுப்பணைகளைக் கட்டினார். இதன்மூலம் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் அந்த மாநிலத்தில் நீராதாரம் அதிகரித்தது.

மக்கள் விரோத திமுக
மக்கள் விரோத திமுக

ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிலை இல்லை. குறிப்பாகக் காவிரியில் தூர்வாராத காரணத்தினால் புதர் மண்டி உள்ளது. மழைநீரைத் தேக்கிவைக்க போதிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகக் கடலில் சென்று கலந்துவருகிறது. எனவே, ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

துரைமுருகனின் தண்ணீர் வியாபாரம்

நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் அவருடைய தொகுதியில்கூட பாலாற்றில் ஒரு அணைகள்கூட கட்ட வில்லையே எனச் செய்தியாளர் கேட்டதற்கு, "அவர் தொகுதியில் மட்டுமில்லை தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் தடுப்பணைகள் கட்டவில்லை. முதலமைச்சர் இப்படிப்பட்டவர்களுக்குத் தான் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.

குறிப்பாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் கதர் வாரிய துறை அமைச்சர், கட்டப்பஞ்சாயத்து செய்பவருக்கு அறநிலையத் துறை அமைச்சர், ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் வழங்க மறுத்த துரைமுருகனுக்கு நீர்வளத் துறை அமைச்சர் பதவி என அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் துரைமுருகன், ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் வழங்க மறுக்கும் காரணம், காட்பாடியில் அருவி என்ற பெயரில் தண்ணீர் வியாபாரம் செய்துவருகிறார்" என்றார்.

இதையும் படிங்க: 'மாநிலப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும்போது எழுந்து நிற்பது கட்டாயம் - அரசாணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.