ETV Bharat / state

வேலூர் மத்திய சிறை கைதிகளுக்கு பயோமெட்ரிக் கேன்டீன் வசதி அறிமுகம்!

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் டிஐஜி ராஜலட்சுமி வழிகாட்டுதல் பேரில் பயோமெட்ரிக் கேன்டீன் கொண்டுவரப்பட்டது. இதனை சிறையின் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 8, 2023, 4:38 PM IST

வேலூர் மத்திய சிறைகளிலும், மாநிலத்தில் உள்ள பெண்களுக்கான சிறப்பு சிறைகளிலும் சிறைவாசிகள் சொந்தப் பணக் கணக்கு பயோமெட்ரிக் கேன்டீன்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. பிசிபி கேன்டீன்கள் சிறைவாசிகளின் நலனுக்காக சோப்பு, பிஸ்கட், டீ, காபி, பன், டூத்பேஸ்ட் மற்றும் பிரஷ், தேங்காய் எண்ணெய், பழங்கள், பல்வேறு தின்பண்டங்கள் மற்றும் உணவு போன்ற பல்வேறு பொருள்களை கட்டண அடிப்படையில் வழங்குகின்றன.

இந்த பிசிபி கேன்டீன்களில் ஒவ்வொரு 'ஏ' வகுப்பு சிறைவாசியும் வாரத்திற்கு 1000 ரூபாய் வரையிலும், ஒவ்வொரு 'பி' வகுப்பு சிறைவாசியும் வாரத்திற்கு 750 ரூபாய் வரையிலும் பொருள்கள் வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். முறைகேடுகளை அகற்றவும், பிசிபி கேன்டீன்களின் வெளிப்படையாகவும், செயல்பாடுகளை மாற்றுவதற்காக, சிறைத்துறை டிஜிபி பொறுப்பாகவும் கேன்டீன்களின் செயல்பாடுகளை சீரமைக்கும் திட்டத்தை, மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கினார்.

இத்திட்டம் நிறைவடைந்துள்ளது மற்றும் பயோமெட்ரிக் கேன்டீன் அமைப்பு முழுமையாக புதுப்பிக்கப்பட்டு பயோமெட்ரிக் அணுகல் அம்சங்களுடன் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது. கணினிமயமாக்கப்பட்ட பயோமெட்ரிக் கேன்டீன்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு பின்வரும் முக்கிய அம்சங்கள் உள்ளன. சிறைவாசிகள் இப்போது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் மட்டுமே கேன்டீன் பொருள்களை வாங்க முடியும், அதாவது, கைரேகை ஸ்கேன் / ஸ்மார்ட் கார்டு மூலமாக வாங்க முடியும்.

இதையும் படிங்க: கோவை சரக காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆலோசனை!

அனைத்து விற்பனை மற்றும் தொகை விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன பயோமெட்ரிக் கேன்டீன்கள் மூலம் விற்கப்படும் பொருள்கள் மற்றும் கட்டணங்கள் குறைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச் சிறைகளில் ஒரே மாதிரியாக மாற்றப்பட்டுள்ளன.

சிறைவாசிகள் தங்கள் வாராந்திர மீதமுள்ள வரம்பு இருப்பு மற்றும் மொத்த நிகர இருப்பு ஆகியவற்றை எந்த நேரத்திலும் அறிந்து கொள்ளலாம். அனைத்து பதிவுகளும் எதிர்கால குறிப்புக்காக கணினியில் சேமிக்கப்படும். சிறைகளில் உள்ள அனைத்து பயோமெட்ரிக் கேன்டீன் செயல்பாடுகளின் அறிக்கைகளையும் சிறைத் தலைமையகத்தில் இருந்து பார்க்கலாம்.

பயோமெட்ரிக் கேன்டீன்களின் அனைத்து பரிவர்த்தனைகளும் சம்பந்தப்பட்ட சிறைச்சாலையின் தணிக்கைக் குழு மற்றும் சிறைத் தலைமையகத்தின் தணிக்கைக் குழுவால் கட்டாயமாக தணிக்கை செய்யப்படும். கணினி மயமாக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் அமைப்பு மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைவாசிகளுக்கும் பயனளிக்கும் மற்றும் அவர்களின் நலனுக்காக கேன்டீன் பங்களிக்கும்.

இந்த நடைமுறையில் முறைகேடுகளை தவிர்க்கவும், வெளிப்படை தன்மை இருக்கவும் பயோமெட்ரிக் முறை பல கேண்டீன்களில் சிறைத்துறை டிஜிபி அமரேஷ்பூஜாரி உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: DIG Vijayakumar Suicide: முகாம் அலுவலகத்தில் என்ன நடந்தது? பாதுகாவலர் அளித்த புகார் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.